← முகப்பு

ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை..!

தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்குவோர் மத்தியில் மீண்டும் கவனம் திரும்பியுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை..!

சென்னை: இந்த மாதம் முழுவதும் தொடர் சரிவுக்குப் பிறகு தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 23) அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.1,085 அதிகரித்து ரூ.92,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் கணிசமாக உயர்ந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் பெடரல் வங்கியின் வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்புகள் ஆகியவை தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்குக் காரணமாக உள்ளன.

தொடர்ந்து விலை குறைந்து வந்த நிலையில், இன்று ஏற்பட்டுள்ள இந்த உயர்வு தங்கச் சந்தையில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் நாட்களில் சர்வதேசப் பொருளாதாரச் சூழலைப் பொறுத்து தங்கத்தின் விலையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் வெள்ளி ரூ.175க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1.75 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !