கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மூலக்குத்துறை கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த், குடும்ப வறுமை காரணமாக மீன்பிடி தொழில் செய்வதற்காக ஓமன் நாட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அங்கு மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட படகு விபத்தில் பிரசாந்த் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ஓமன் நாட்டு அதிகாரிகளால் பிரசாந்தின் உடல் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Buy Now ! Pay Daily !
இதையடுத்து, மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ் முன் அன்சாரி, உயிரிழந்த பிரசாந்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்த பிரசாந்தின் உடலை தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து பாதுகாப்பாக சொந்த கிராமத்திற்கு கொண்டுவர வேண்டும் என்றும், துயரத்தில் இருக்கும் குடும்பத்திற்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.






