← முகப்பு

Guidance Tamil Nadu நிறுவனத்தில் கூண்டோடு ராஜினாமாவா? தமிழக அரசு விளக்கம்!

தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தில் ஜூலை மாதத்தில் பெருமளவில் ராஜினாமா நடைபெறவில்லை என அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

Guidance Tamil Nadu நிறுவனத்தில் கூண்டோடு ராஜினாமாவா? தமிழக அரசு  விளக்கம்!

தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தில் (Guidance Tamil Nadu) ஜூலை மாதத்தில் பெருமளவில் அதிகாரிகள் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல்களுக்கு அந்நிறுவனம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒரு நிறுவனத்தில் பணியாளர்கள் விலகுவது இயல்பான நிகழ்வுதான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகள், உயர்கல்வி, பணியிட மாற்றம், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் குடும்பக் கடமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணியிலிருந்து விலகுவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும், வேறு நிறுவனங்களில் புதிய வாய்ப்புகளைத் தேடிச் செல்லும் ஊழியர்கள் உட்பட, தங்களது பணியாளர்களின் தொழில்சார் விருப்பங்களை கைடன்ஸ் தமிழ்நாடு எப்போதும் மதித்து வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

முதலீடுகளை ஈர்ப்பதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் தமிழ்நாடு தனது அண்டை மாநிலங்களுடன் எப்போதும் ஆரோக்கியமான மற்றும் ஆக்கப்பூர்வமான போட்டியையே கடைப்பிடித்து வருவதாகவும், இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இருவருக்கும் தமிழ்நாடு தொடர்ந்து விருப்பமான முதலீட்டுத் தளமாக இருந்து வருவதாகவும் கைடன்ஸ் தமிழ்நாடு நிறுவனம் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !