← முகப்புசென்னை →

வி.எஸ்.பாபு உடலை தோளில் சுமந்த CM விஜய்!

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய், இறுதிச் சடங்கில் அவரது உடலைத் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மறைவையடுத்து, அவரது உடலுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, இறுதிச் சடங்கின்போது வி.எஸ்.பாபுவின் உடலைத் தனது தோளில் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார். இந்தச் சம்பவம் அங்கிருந்த தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

75 வயதான வி.எஸ்.பாபு, நீண்டகாலமாக சுவாசப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்தார். கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நவம்பர் 19ஆம் தேதி பிற்பகல் 2.24 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அவரது உடல் சென்னை பெரம்பூரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு சென்ற முதலமைச்சர் விஜய், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், வி.எஸ்.பாபுவின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற இறுதிச் சடங்கில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், மறைந்த வி.எஸ்.பாபுவின் உடலைத் தனது தோளில் சுமந்து சென்று இறுதி ஊர்வல வாகனத்தில் ஏற்றினார். அவருடன் அமைச்சர்களும் உடலைச் சுமந்து சென்றனர். கட்சியின் மூத்த நிர்வாகியும் சட்டமன்ற உறுப்பினருமான வி.எஸ்.பாபுவுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அளித்த இந்த இறுதி மரியாதை அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !