மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய கனிமொழி எம்.பி., முந்தைய ஆட்சிக் காலத்தில் "சாரி வேண்டாம், நீதி வேண்டும்" என்று குரல் கொடுத்த முதலமைச்சர் விஜய், தற்போது தனது காவல்துறையால் நிகழ்ந்துள்ள இந்த மரணம் குறித்து எப்போது பேசப்போகிறார் எனக் கேள்வி எழுப்பினார்.
Buy Now ! Pay Daily !
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் குறைந்தபட்சம் மன்னிப்பாவது கேட்பாரா என்றும் அவர் விமர்சித்துள்ளார். காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்த விவகாரம் தற்போது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.






