← முகப்புமதுரை →

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்பு

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்பு – 100 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியை நெருங்கிய போலீசார்!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்பு

மதுரை மாநகரில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில், சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, மீட்கப்பட்ட நகைகள் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் மற்றும் துணை காவல் ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோர் முன்னிலையில் செய்தியாளர்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன், கொள்ளைச் சம்பவம் தொடர்பாக விசாரணையைத் தீவிரப்படுத்தி, சுமார் 100 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததாகத் தெரிவித்தார். இந்த விசாரணையில் 1 காவல் ஆய்வாளர், 6 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 15 காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளியைக் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், கொள்ளை நடந்தபோது சுமார் 15 முதல் 18 கிலோ வரை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக முதற்கட்டமாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. பின்னர், துல்லியமாக எடை சரிபார்க்கப்பட்டதில் 11.38 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்ததாகவும், அந்த நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் விளக்கமளித்தார்.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் மீது ஏற்கெனவே 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அந்த வழக்கின் விவரங்களையும் தற்போது விசாரணைக்கு எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் தொடர்பாகவும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த காவல் ஆணையர், தேவையற்ற சமூக வலைதளப் பதிவுகளை முடக்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ரூ.15 கோடி மதிப்பிலான நகைக் கொள்ளை வழக்கில், போலீசாரின் தீவிர விசாரணைக்குப் பிறகு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுமையாக மீட்கப்பட்டிருப்பது மதுரையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !