கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார் விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த வழக்கில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக் கண்காணிப்பு அதிகாரியான ஐ.ஜி. காமினி மற்றும் விசாரணை அதிகாரியான திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங் ஆகியோர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
Buy Now ! Pay Daily !
இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி.ஸ்ருஷ்டி சிங், ஏற்கனவே மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் தொடர்பான பல்வேறு விவரங்களைக் கேட்டறிந்து வாக்குமூலம் பதிவு செய்ததாகத் தகவல் வெளியானது.
இதன் தொடர்ச்சியாக, விசாரணைக் கண்காணிப்பு அதிகாரி ஐ.ஜி.காமினி மற்றும் எஸ்.பி.ஸ்ருஷ்டி சிங் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு பெண் ஆட்சியரிடம் புகார் தொடர்பான பல்வேறு விவரங்கள் மற்றும் அதற்கான ஆவணங்கள் குறித்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்து இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான எஸ்.பி. ஸ்ருஷ்டி சிங் கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் நீதிமன்றத்திற்கு நேரில் வந்தார். அங்கு நீதிபதி சுவாதி அழகப்பன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நடவடிக்கை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மாவட்ட ஆட்சியரிடம் உயர் காவல் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியது, நீதிமன்றத்தில் ஆட்சியர் வாக்குமூலம் அளித்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் என இந்த வழக்கில் அடுத்தடுத்த நகர்வுகள் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





