← முகப்பு

புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு! 4 பேர் உயிரிழப்பு! - முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ரங்கசாமி அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார்.

புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு! 4 பேர் உயிரிழப்பு! - முதல்வர் ரங்கசாமி அவசர ஆலோசனைக் கூட்டம்!

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, டெங்கு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். அப்போது, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் கொசு மருந்து தெளித்தல், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றுதல், டெங்கு கொசு உற்பத்தியாவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மேலும், அரசு சுகாதார நிலையங்களில் பப்பாளி இலைச்சாறு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !