தமிழக முதல்வர் விஜய் தொகுதி அளவில் பொதுத்தேர்வில் முதல் இடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி வருகிறார்.
ஆண்டுதோறும் பொதுத்தேர்வில் தொகுதி அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பாராட்டு விழா நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடந்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின் இந்த நிகழ்ச்சி நடைபெறுமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் எந்த நிலையிலும் மாணவர்களுக்கு விருது வழங்குவது நிறுத்தப்படக் கூடாது என உத்தரவிட்டிருந்த முதல்வர் விஜய் இந்த ஆண்டும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொள்ள கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
Buy Now ! Pay Daily !
அதன்படி மாணவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா கடந்த 04.11.2026 அன்று நடைபெற்றது. அதை தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக ஈரோடு, கோவை, திருப்பூர், பெரம்பலூர், நீலகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் உள்ள மாணவ, மாணவியருக்கு இன்றும், நாளையும் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் செண்டரில் நடைபெறும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.





