புதுச்சேரியில் கடலோர பாதுகாப்பு படையின் ஒத்திகை நடந்து வரும் நிலையில், பெரியகடை பகுதியில் போலீசார் நடத்திய சோதனையின்போது, அங்கு சுற்றித் திரிந்த நான்கு பேரின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த நான்கு பேரையும் பிடித்த போலீஸார் அவர்கள் யார் என விசாரித்துள்ளனர். அவர்களிடம் சோதனை நடத்தியபோது வெடிகுண்டு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஆய்வு செய்ததில் அது போலியான வெடிகுண்டு என தெரிய வந்தது.
தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நான்கு பேரில் இருவர் சுங்கத்துறை அதிகாரிகள் என்றும், மற்ற இருவர் இந்திய கடற்படை வீரர்கள் என்றும் தெரியவந்தது. மேலும், கடலோர பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுகளைச் சோதிக்கும் வகையில் இவர்கள் போலி வெடிகுண்டுடன் மர்ம நபர்கள் போல வந்திருந்தது தெரியவந்தது. இந்த ஒத்திகையின்போது நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Buy Now ! Pay Daily !
பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.






