← முகப்பு

தீபம் ஏற்றாதது ஏன்? திருப்பதியில் இருந்து வந்த நோட்டீஸ்! – சிக்கலில் முதல்வர் விஜய்?

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை நிறைவேற்றாதது குறித்து தமிழக அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

தீபம் ஏற்றாதது ஏன்? திருப்பதியில் இருந்து வந்த நோட்டீஸ்! – சிக்கலில் முதல்வர் விஜய்?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இட்ட உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், அதேசமயம் தீபம் ஏற்றுவதற்கு புதிய நிபந்தனைகளுடனான உத்தரவை அளித்தது.

ஆனால் கார்த்திகை அன்று திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது அவமதிப்பாக கருதப்படும் நிலையில், தீபம் ஏற்றாதது ஏன்? என நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்திருந்தார். அதில் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாகவும், ஆனால் கோயில் நிர்வாகம் கடையில் உச்சி பிள்ளையார் கோவிலிலேயே தீபம் ஏற்ற முடியும் என சொன்னதால், தீபத்தூணில் ஏற்ற இயலாமல் போனதாகவும் விளக்கமளித்திருந்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கோயில் நிர்வாகமும், ஸ்தானிக பட்டர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உடன்படவில்லை எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அதை ஸ்தானிக பட்டர்கள் மறுத்துள்ளனர். தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில் நிர்வாகமோ, அரசு அதிகாரிகளோ யாரும் தங்களிடம் எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் வெளியான தகவல்களை மறுத்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அரசு ஒரு தவறை மறைக்க இன்னொரு தவறு என அடுத்தடுத்து சிலந்தி வலை சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறது என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது முதல்வர் விஜய்க்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரிடமிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், திருப்பரங்குன்றத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி தீபம் ஏற்றாதது குறித்த முதல்வர் விஜய்யின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோட்டீஸ் அனுப்பப்பட்ட 48 மணி நேரத்திற்குள் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், நிறைவேற்ற முடியாமல் போனதற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும். தமிழக அரசிடமிருந்து சரியான பதில் கிடைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த பல்வேறு சிக்கல்களுக்கு நடுவே நாளை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் திருப்பரங்குன்றம் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் தீர்ப்பை நிறைவேற்றாதது குறித்து அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !