← முகப்புகள்ளக்குறிச்சி →

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தலைமையில் காலாண்டு ஆய்வுக் கூட்டம்!

கள்ளக்குறிச்சியில் பாரதப் பிரதமரின் சிறுபான்மையினருக்கான 15 அம்சத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் தலைமையில் காலாண்டு ஆய்வுக் கூட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாரதப் பிரதமரின் சிறுபான்மையினருக்கான 15 அம்சத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்களுடனான காலாண்டு ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் நவம்பர் 20ஆம் தேதி நடைபெற்ற இக்கூட்டத்தில், 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான திட்டப் பணிகளின் முன்னேற்றம் ஆய்வு செய்யப்பட்டது.இதில், டாம்கோ கடன் திட்டம் மூலம் 3 தனிநபர்களும், சிறுதொழில் கடன் திட்டத்தின் கீழ் 257 நபர்களும், 16 சுயஉதவிக் குழுக்களும் பயனடைந்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 5,282 குழந்தைகள், 704 கர்ப்பிணிகள், 713 பாலூட்டும் தாய்மார்கள் பயன்பெற்றுள்ளனர்.மேலும், மகளிர் திட்டத்தின் மூலம் 6 நபர்களுக்கு ரூ.69 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 155 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழும் சிறுபான்மையினர் பயனடைந்துள்ளனர்.சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தையும் நலனையும் மேம்படுத்த அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !