← முகப்புகள்ளக்குறிச்சி →

அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த சர்ச்சை – அதிமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த சர்ச்சை – அதிமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது !

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு சர்ச்சைக்குரிய வகையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கள்ளக்குறிச்சியில் அதிமுக மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அவரது வீட்டிற்குச் சென்று பிரச்சனையில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவிய நிலையில், சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் இந்தக் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதேசமயம், மாவட்ட ஆட்சியர் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் கணவருமான ஷேக் அப்துல் ரகுமான், சென்னையில் தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமாரை நேரில் சந்தித்து புகார் அளித்ததாகவும், தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் யுபிஎஸ்சி இயக்குநரகத்திலும் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும், இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏழு நாட்களுக்குள் புகார் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு ஏற்பாட்டில், முன்னாள் அமைச்சரும், அதிமுக மகளிர் அணி செயலாளருமான பா. வளர்மதி தலைமையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் , திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பழனிசாமி ,ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்தும் அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் என சுமார் 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !