← முகப்புகள்ளக்குறிச்சி →

அரசு மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்

*திருக்கோவிலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்,காணொளி காட்சியை கண்டதும் எழுந்து நின்ற மாவட்ட ஆட்சியர் பத்மஜா

அரசு மருத்துவமனையை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்வர்

திருக்கோவிலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர்: காணொளி காட்சியை கண்டதும் எழுந்து நின்ற மாவட்ட ஆட்சியர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தாலுக்கா மருத்துவமனையானது மாவட்ட தலைமை மருத்துவமனையாக கடந்த திமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்டு 59.04 கோடி மதிப்பீட்டில் ஆறு தளங்களுடன் 300 படுக்கை அறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக காத்திருந்தது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த நிலையில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிலையில் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்கிறார் என்ற வீடியோ வெளியானவுடன் அமர்ந்திருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து சார் ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மருத்துவமனையை திறந்து வைத்த பின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சார் ஆட்சியர் மாவட்ட மருத்துவ அலுவலர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். அதன் பின்னர் அவசர சிகிச்சை பிரிவு அறையை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த மருத்துவரிடம் கேட்டிருந்தார். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் புதிய மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள் செவிலியர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறையினர் நகராட்சி நிர்வாகத்தினர் உள்ளிட்ட பல அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !