வாணாபுரம் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த நபர் கைது: 24 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே லா.கூடலூர் மாரியம்மன் கோவில் தெருவில் தாமோதரன் மளிகை என்ற பெயரில் மளிகை கடை வைத்து நடத்தி வருவதாகவும், ஹான்ஸ் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் பிரபாகரன் தலைமையில் சென்று தணிக்கை செய்ததில் தாமோதரன் மளிகை கடையில் மூன்று பாக்கெட் HANS கைப்பற்றப்பட்டு, அவரது கொல்லையில் இருந்த கொட்டாயில் இரண்டு மூட்டை (ஒன்று பிரித்த நிலையில்) ஹான்ஸ் கைப்பற்றப்பட்டு தாமோதரனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் வட இந்தியர்கள் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நேரில் வெள்ளை நிற கார் ஒன்றின் மூலம் வந்து கொடுத்ததாகவும் தெரிவித்தார், பின்னர் தாமோதரனின் அலைபேசியை வாங்கி அவர்களின் எண்களை அழித்துவிட்டதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 24 ஆயிரம் மதிப்புள்ள ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து தாமோதரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Buy Now ! Pay Daily !





