சங்கராபுரம் அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த பாம்பு கடித்ததில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு - உயிருக்கு ஆபத்தான நிலையில் தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த நெல் வண்டி ஓட்டுநரான சந்திரன் புஷ்பா தம்பதியினரின் மூன்று வயது குழந்தை தர்ஷினி என்கின்ற தேவதர்ஷினி மற்றும் இரண்டு வயது குழந்தை ஜனனி என்கின்ற தேவஜனனி ஆகிய இருவரும் தாய் புஷ்பா உடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு கடித்ததில் தாய் புஷ்பா அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து குழந்தையையும் தாய் புஷ்பாவையும் அருகில் உள்ள புதுப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் தொடர்ந்து புஷ்பாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Buy Now ! Pay Daily !
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் காவல் துறையினர் உயிரிழந்த குழந்தைகள் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
சங்கராபுரம் அருகே வீட்டில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த கிராமம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது





