← முகப்பு

காஸாவில் மீண்டும் பதற்றம் : வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஒப்பந்தம் அமலில் உள்ள சூழலிலும், காஸா முனையில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, காஸா நகரப் பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளன.

காஸாவில் மீண்டும் பதற்றம் : வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்!

உலகின் மிக நீண்ட கால மற்றும் சிக்கலான புவிசார் அரசியல் மோதல்களில் ஒன்றாக இஸ்ரேல் - காஸா பிரச்சினை திகழ்கிறது.

புனித பூமியான ஜெருசலேம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலப்பரப்பு யாருக்குச் சொந்தம் என்ற உரிமைப் போராட்டமாகத் தொடங்கிய இந்த விவகாரம், பல தசாப்தங்களாகத் தீராத போராகவும், மனிதாபிமானப் பேரழிவாகவும் நீடித்து வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

ஒருபுறம் தங்களின் பாதுகாப்பு மற்றும் இருப்பை உறுதி செய்யப் போராடும் இஸ்ரேலும், மறுபுறம் சுதந்திரமான தாயகம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் பாலஸ்தீன மக்களும் என இரு தரப்புக்கும் இடையிலான இந்த மோதல், சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சர்வதேச நாடுகளின் தலையீட்டால் 2025-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் போர் நிறுத்த மற்றும் அமைதி ஒப்பந்தம் கொண்டுவரப்பட்ட போதிலும், அவ்வப்போது இஸ்ரேல் நடத்தும் வான்வழித் தாக்குதல்களாலும், எல்லைப் பதற்றங்களாலும் காஸாவில் முழுமையான அமைதி இன்னும் திரும்பவில்லை.

இதன் தொடர்ச்சியாக கடந்த புதன்கிழமை இரவு தொடங்கி வியாழக்கிழமை அதிகாலை வரை காஸா நகரம் மற்றும் மத்திய காஸா பகுதிகளை இலக்காகக் கொண்டு இஸ்ரேலியப் படைகள் வான்வழித் தாக்குதல்களைத் தொடுத்தன.

இந்தத் தாக்குதலில் 8 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவின் சுகாதாரத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக, மத்திய காஸாவின் தெயிர் அல்-பலாஹ் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கிருந்த பாலஸ்தீன தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹமாஸ் அதிகாரி பலி: இஸ்ரேல் விளக்கம்

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், இஸ்ரேலியப் படைகளின் துல்லியமான தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் பொருளாதாரம் மற்றும் கல்வி விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றிருந்த மூத்த அதிகாரி காலெத் அபு நடா கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கைகளின் மூலம் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்த போதிலும், தாக்குதல் குறித்த மேலதிக விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.

அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகும் இஸ்ரேலியப் படைகள் அவ்வப்போது நடத்தி வரும் தாக்குதல்களால் காஸாவில் உயிரிழப்புகள் நின்றபாடில்லை. ஒப்பந்தம் அமலானதற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் மட்டும் 1,600-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பது, அப்பகுதியில் நிலவும் அமைதி முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !