← முகப்பு

விண்வெளியில் ஏஐ டேட்டா சென்டர்: எலான் மஸ்கின் அடுத்த இலக்கு!

தொழில்நுட்ப உலகின் அடுத்தகட்டமாக, விண்வெளியில் பிரமாண்ட டேட்டா சென்டர்களை அமைப்பதற்கு, எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு அதிகாரபூர்வ அனுமதி வழங்கியுள்ளது.

விண்வெளியில் ஏஐ டேட்டா சென்டர்: எலான் மஸ்கின் அடுத்த இலக்கு!

விண்வெளியில் 10 லட்சம் செயற்கைக்கோள்களுடன் பிரமாண்ட ஏ.ஐ. தரவு மையம்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா அனுமதி அமெரிக்காவை மையமாக வைத்துச் செயல்படும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு மற்றும் விண்வெளிப் போக்குவரத்து நிறுவனமாகும்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாவ்தோர்ன் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இது செயல்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

2002-ஆம் ஆண்டு தொழிலதிபர் எலான் மஸ்க் என்பவரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், விண்வெளிப் பயணத்திற்கான செலவைப் பெருமளவில் குறைப்பதும், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதுற்கான ஆய்வுகளில் இறங்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் அடுத்த இலக்காக, பூமியில் அதிகரித்து வரும் ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டால், டேட்டா சென்டர்களை இயக்குவதற்கு அதிகப்படியான மின்சாரமும், இடமும், குளிரூட்டும் வசதிகளும் தேவைப்படுகின்றன.

இதற்குத் தீர்வாக, பூமியின் சுற்றுப்பாதையில் 10 லட்சம் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி, விண்வெளியிலேயே அதிநவீனக் டேட்டா செண்டர்களை அமைப்பதற்கு ஸ்டார்மைண்ட் என்கிற திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

அமெரிக்காவின் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் இத்திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கியிள்ளது. இந்த ஒப்புதலின் மூலம், விண்வெளி சார்ந்த கணினித் தொழில்நுட்பத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.

இத்திட்டத்தின் பயன்பாடுகள்

'ஸ்டார்மைண்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில், விண்வெளியில் தடையின்றி கிடைக்கும் சூரிய ஆற்றலைக் கொண்டு இந்த ஏ.ஐ. தரவு மையங்கள் இயங்கும்.

பூமியில் அதிகரித்து வரும் அதிவேகக் கணினித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மிகப்பெரிய அளவிலான தரவுகளை விண்வெளியிலிருந்தே செயலாக்கம் செய்து பூமிக்கு அனுப்பும் திறனை இவை கொண்டிருக்கும்.

அமெரிக்க ஆணையத்தின் நிலைப்பாடு

இது குறித்து எஃப்.சி.சி. தலைவர் பிரெண்டன் கார் வெளியிட்டுள்ள கருத்தில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ், அமெரிக்கா 'சூப்பர் இன்டெலிஜென்ஸ்' எனப்படும் அதிநவீன நுண்ணறிவுச் சகாப்தத்தை நோக்கி உலகை வழிநடத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விண்வெளியில் ஒரே நேரத்தில் 10 லட்சம் கணினித் தொகுப்புகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான காலக்கெடு

இந்தப் பிரமாண்டத் திட்டத்தைக் கட்டம் கட்டமாகச் செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • 2033 நவம்பரில் திட்டப் பணிகளைத் தொடங்கி, குறைந்தபட்சம் ஒரு விண்வெளித் தரவு நிலையத்தையாவது செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
  • 2035 நவம்பரில் விண்ணில் 1 லட்சம் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தும் இலக்கை எட்ட வேண்டும்.
  • 2038 நவம்பரில் மொத்த இலக்கில் 50 சதவீதம், அதாவது 5 லட்சம் செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிறுவ வேண்டும்.
  • 2040-ம் ஆண்டு வரையில் மீதமுள்ள நிலையங்களையும் படிப்படியாக விண்ணில் நிலைநிறுத்தித் திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும்.

பூமியில் தரவு மையங்களை அமைப்பதால் ஏற்படும் இடப் பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான மின்சாரத் தேவைக்கு மாற்றாக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்த 'ஸ்டார்மைண்ட்' திட்டம் உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !