← முகப்பு

ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட ஜென்சன் ஹூவாங்!

தனிப்பட்ட நடத்தை விதிமீறல் மற்றும் உளவுத்துறை தொடர்பான சர்ச்சைகளால் பதவி விலகிய என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட ஜென்சன் ஹூவாங்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மற்றும் சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடிய நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீன பெண் உளவாளியுடன் தகாத உறவிலிருந்ததாக கூறி, அந்நிறுவனம் அவரை பதவியில் இருந்து விலக்கியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், என்விடியா நிர்வாகக் குழுவிற்கு தொடர்ச்சியாக நெருக்கடி அளித்ததால், என்விடியா நிறுவனம் ஹூவாங்குக்கு மீண்டும் தலைமை அதிகாரியாக பதவி வழங்கியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

தலைமை அதிகாரியாக மீண்டும் அலுவலகத்திற்கு வந்த ஹூவாங், என்விடியா நிறுவனத்தின் பொதுவெளியில் தான் செய்த தவறுக்கு ஊழியர்களின் முன் மன்னிப்பு கோரினார்.

இதுகுறித்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தான் உருவாக்கிய நிறுவனத்தின் நடத்தை விதிகளைத் தானே மீறியது மன்னிக்க முடியாத தவறு என்று அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், "நான் சில மிக மோசமான தவறுகளைச் செய்துவிட்டேன். இதன் மூலம் எனது மனைவி லோரி, குழந்தைகள் மற்றும் நிறுவன ஊழியர்கள் அனைவரையும் காயப்படுத்திவிட்டேன். என் வாழ்நாளில் நான் எதிர்கொண்ட மிகக் கடினமான தருணம் இது," என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், மனரீதியாகத் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும் தினமும் ஒன்றரை மணி நேரம் உளவியல் ஆலோசனைப் பயிற்சி பெற்று வருவதாகவும், அது தனக்குப் பெரிதும் உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு தான் இணைந்து தொடங்கிய நிறுவனத்திற்கு மீண்டும் திரும்பியதற்கு நன்றி தெரிவித்த ஹுவாங், நிர்வாகக் குழுவின் முழுமையான ஆய்வுக்குப் பிறகே தமது மறுநியமனம் நடந்ததாக விளக்கமளித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !