திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நிலக்கோட்டை – அணைப்பட்டி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி அறிவழகன் (37) மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் பால்பாண்டித்துரையும் (40) தனது நண்பர்களுடன் அங்கு மது அருந்தியுள்ளார்.
அப்போது அறிவழகனுக்கும் பால்பாண்டித்துரைக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் தலைமை காவலர் பால்பாண்டித்துரையும் அவரது நண்பர் அருள் (37) என்பவரும் சேர்ந்து அறிவழகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
Buy Now ! Pay Daily !
இதில் தலையில் பலத்த காயமடைந்த அறிவழகன் முதலில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நிலக்கோட்டை போலீசார், தலைமறைவான தலைமை காவலர் பால்பாண்டித்துரை மற்றும் அவரது நண்பர் அருளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே தாக்குதல் சம்பவத்தில் சிக்கியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





