மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல், பசுமையான பள்ளத்தாக்குகளுக்கும் குளிர்ந்த காலநிலைக்கும் பெயர் பெற்றது.
ஆனால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பசுமை மலைத்தொடர் முழுவதும் ஊதா மற்றும் நீல நிறப் போர்வை போர்த்தியது போலக் காட்சியளிக்கும்.
Buy Now ! Pay Daily !
இயற்கையின் இந்த அபூர்வ நிகழ்விறகு காரணம் கொடைக்கானலின் புகழ்பெற்ற குறிஞ்சி மலர் சீசனே ஆகும்.
அந்த வகையில் தற்போது நீல நிற குறிஞ்சி மலர்களின் சீசன் தொடங்கியுள்ளது. பொதுவாக குறிஞ்சி மலர் 12 வருடத்திற்கு ஒரு முறை 7 வருடம், 6 வருடத்திற்கு ஒரு முறை என பூக்கும் தன்மை கொண்டவை.
அந்த வகையில் தற்போது தாண்டிக்குடி பண்ணைக்காடு மலைக்கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான மலைச்சாலையோரத்தில், 6 வருடத்திற்கு ஒரு முறை பூத்து குலுங்கும் ஓடை நீல குறிஞ்சி மலர்கள் சீசன் துவங்கியுள்ளன.
இந்த பூக்களின் சீசன் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் நீடிக்கும். இதனை தொடர்ந்து இந்த சாலையில் பயணிக்கும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் இந்த நீல குறிஞ்சி மலர்கள் பூக்க துவங்கியுள்ளதை ஆர்வத்துடன் கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மூணாறு, ஊட்டி பகுதியில் நீல குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கியதை தொடர்ந்து, தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்து குலுங்குவதும் குறிப்பிடத்தக்கது.




