← முகப்பு

பெரு நாட்டில் 6.9 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி!

லத்தீன் அமெரிக்க நாடான பெருவில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டில் 6.9 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மக்கள் பீதி!

உலகில் ஆண்டுதோறும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகும் பகுதியாக பசிபிக் படுகை உள்ளது. 40 ஆயிரம் கிலோ மீட்டருக்கு நீண்டுள்ள பசிபிக் படுகையில் ஆழ்கடலிலும், வெளியிலுமாக ஏராளமான எரிமலைகள் உள்ள நிலையில் இதற்கிடையேயான நிலப்பகுதியில் பெரு நாடு அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் நாடாக ஜப்பான், இந்தோனேசியா நாடுகளை தொடர்ந்து பெரு உள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு 7.09 மணியளவில் நிலநடுக்கம் பதிவானதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் மையப்புள்ளி பெரு நாட்டின் ஜூனின் நகரத்திற்கு வடக்கே 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில் 108 கிலோமீட்டர் ஆழத்தில் உருவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறினர். ஆனால் இதனால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என பெரு பேரிடர் மீட்பு மையம் தெரிவித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கடந்த ஆகஸ்ட் மாதம் இதே ஆண்டிஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தில் பள்ளிகள், வீடுகள் சேதமடைந்தன. அதற்கு முன்னதாக ஜூலை மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு, 30க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். மாதம்தோறும் ஏதாவதொரு வகையில் நிலநடுக்கத்தை சந்தித்து வருவதால் பெரு மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !