உலகம் முழுவதும் மக்கள் சாட்ஜிபிடி, ஜெமினி, க்ளாட், க்ராக் என பல ஏஐகளை பல்வேறு பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏஐகளுக்கு நாம் அனுப்பும் கட்டளைகள் அனைத்தும் டேட்டா செண்டர்களுக்கு சென்று ப்ராஸஸ் ஆகி நமக்கு மீண்டும் கிடைக்கின்றன. ஒரு ஏஐ நிறுவனம் எவ்வளவு அதிகமான டேட்டா செண்டர் வைத்திருக்கிறதோ அவ்வளவு அதிகமாக பயனர்களை அது வேகமாக கையாள முடியும், ஏஐ செயல்பாடுகளும் வேகமாக இருக்கும்.
ஆனால் இந்த டேட்டா செண்டர்கள் இயங்க அதிகபடியான தண்ணீர் தேவைப்படுவதோடு, ஏஐ டேட்டா செண்டர்களால் சுற்றுசூழல் மாசுபாடும் அதிகரிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. உலகம் முழுவதும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் ChatGPT, Gemini, Claude, Grok என அனைத்தும் அமெரிக்க நிறுவனங்களின் ஏஐ ஏஜெண்டுகள்தான். ஆனால் அவற்றிற்கான டேட்டா செண்டர்களை அமெரிக்காவில் அமைப்பதற்கு அந்நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் இந்த நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து தங்களது டேட்டா செண்டர்களை அந்நாடுகளில் அமைக்க முயற்சித்து வருகின்றன. இந்நிலையில்தான் இந்த செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
Buy Now ! Pay Daily !
எப்படி அமெரிக்க நிறுவனங்கள் ஏஐ வளர்ச்சியில் முன்னணியில் உள்ளதோ அதேபோல சீன நிறுவனங்களும் Moonshot, QWEN, Deepseek என பல ஏஐ ஏஜெண்டுகளை களமிறக்கி வருகின்றன. தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியபோது ”வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்களின் ஏஐ டேட்டா செண்டர்களை அமைக்க நான் அனுமதிக்க மாட்டேன். மற்ற நாடுகளுக்கு ஏஐ டேட்டா செண்டர்கள் சென்றால் அவற்றை சீனா கைப்பற்றவோ, உளவுப்பார்த்து தகவல்களை திருடவோ வாய்ப்புகள் உள்ளது. அதனால் வெளிநாடுகளில் டேட்டா செண்டர்கள் அமைக்க அமெரிக்க நிறுவனங்கள் முயன்றால் அவர்களுக்கு மிகப்பெரிய வரி விதிக்கப்படும்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதிபர் ட்ரம்புக்கு டேட்டா செண்டர்கள் மூலமாக தங்கள் தகவல்கள் சீனாவுக்கு கசிந்துவிடக் கூடாது என்பதில் கவலை என்றால், ஏஐ நிறுவனங்களுக்கோ டேட்டா செண்டர் அமைப்பதே கவலை என்ற நிலைதான் உள்ளது.
ஏற்கனவே பல ஏஐ நிறுவனங்களுக்கு ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் டேட்டா செண்டர் அமைக்க அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு பெரிய அளவிலான நிலம் தேவைப்படும் நிலையில் சமீபத்தில் கூகிள் நிறுவனம் தனது டேட்டா செண்டர் அமைக்க அனுமதி பெறாமல் சுமார் 4 லட்சம் மரங்களை வெட்டியதற்காக பின்லாந்து அரசு கூகிள் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது. அதுபோல பல நாடுகளில் ஏஐ டேட்டா செண்டர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த திடீர் எச்சரிக்கை ஏஐ நிறுவனங்களின் செயல்பாட்டில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.






