← முகப்பு

திடீரென தோன்றிய ’நெருப்பு’ ரயில்! அலறி ஓடிய மக்கள்! – இந்தோனேஷியாவில் அதிர்ச்சி!

இந்தோனேஷியாவில் லெவல் கிராஸிங்கில் ஏற்பட்ட விபத்தில் ரயில் ஒன்று எரிந்துக் கொண்டே வேகமாக வந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென தோன்றிய ’நெருப்பு’ ரயில்! அலறி ஓடிய மக்கள்! – இந்தோனேஷியாவில் அதிர்ச்சி!

தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட காலத்திலும் ரயில் லெவல் க்ராஸிங்குகளில் நடக்கும் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றன. இந்த நாடு என குறிப்பிட்டு இல்லாமல் உலகம் முழுக்கவே பல நாடுகளில் இந்த லெவல் க்ராஸிங் விபத்துகள் தினம் தினம் மக்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.

சமீபத்தில் அப்படி இந்தோனேஷியாவில் நடந்த ஒரு விபத்து தற்போது சமூக வலைதளம் முழுவதும் பேசுப்பொருளாகியுள்ளது. இந்தோனேஷியாவின் சிமலுங்குன் பகுதியில், சியாந்தர் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துக் கொண்டிருந்துள்ளது. அப்போது ஆளில்லா ரயில்வே கேட்டை மினிவேன் ஒன்று கடக்க முயல, அதிவேகமாய் வந்த ரயில் மினிவேனில் மோதியது. இதில் மினிவேனின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீ ஏற்பட்டு, அந்த தீ ரயில் எஞ்சினையும் பற்றிக் கொண்டுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அதிவேகத்தில் சென்ற ரயிலை உடனே நிறுத்த முடியாததால் எரிந்துக் கொண்டே ரயில் சில கிலோ மீட்டர்கள் தூரம் வரை தொடர்ந்து பயணித்துள்ளது. ரயில் எரிந்துக் கொண்டே செல்வதை பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பின்னர் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மினி வேனை இயக்கிய டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ரயிலை இயக்கிய நால்வர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஞ்சினில் பற்றிய தீ மற்ற பயணிகள் பெட்டிகளுக்கு பரவாமல் இருந்ததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்பவம் லெவல் க்ராஸிங் விபத்துகள் குறித்தும், பாதுகாப்பான வழிமுறைகள் குறித்தும் கூடுதல் கேள்விகளை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !