← முகப்பு

இந்தியாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்!

அமெரிக்காவின் 2026 இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தனது முதல் விரிவான செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

இந்தியாவைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்!

அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்கு பின்னர் அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பினை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான தனது முக்கியத்துவம் வாய்ந்த ஆசியப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பியுள்ள டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அதிபர் டிரம்ப், அமெரிக்க மத்திய வங்கியின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் கூறியதாவது:

நமது மத்திய வங்கி அரசியல்மயமாகி இருப்பதால்தான் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகமாகிவிட்டது. இதற்கு மத்திய வங்கியின் தலைவர் தான் காரணம் என்று நான் கூறவில்லை. ஆனால் ஒட்டுமொத்த வங்கி அமைப்பே அரசியல் ரீதியாக செயல்படுவதாக தெரிவித்தார்.

மேலும், நாம் எப்போதெல்லாம் பொருளாதார புள்ளிவிபரங்களை வெளியிடுகிறோமோ அப்போதெல்லாம் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துகிறது என்றும் அமெரிக்காவை அழிப்பதற்காகவே இப்படிச் செய்கிறார்கள் என்றும் கடுமையாக சாடினார்.

நமது நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கும்போது, வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீதத்திலிருந்து 15 முதல் 20 சதவீதமாக உயரும். நமது கடன்களையும் மிக விரைவாக அடைத்துவிடலாம். ஆனால், இங்கே எல்லாம் தலைகீழாக நடக்கிறது என்று பேசினார்.

​இந்தியாவை உதாரணம் காட்டிய டிரம்ப்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை குறித்துப் பேசிய டிரம்ப், 'இந்தியாவை பாருங்கள் அங்கே குறைந்த வட்டி விகிதம் இருப்பதால் தான் அவர்களால் 7 சதவீத ஜி.டி.பி., வளர்ச்சியைப் பெறமுடிந்தது. நாமும் வட்டியைக் குறைத்தால் தான், 20 சதவீத வளர்ச்சியைக் எட்ட முடியும்'. என்று இந்தியாவை பாராட்டி பேசினார்.

மேலும் உலகிலுள்ள மற்ற நாடுகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதே நாம் தான். அமெரிக்காவால் தான் பல நாடுகள் பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்தில் உள்ளன. அப்படியிருக்கையில், உலகிலேயே மிகக் குறைந்த வட்டி விகிதம் அமெரிக்காவில்தான் இருக்க வேண்டும். ​இவ்வாறு அவர் பேசினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !