← முகப்புகடலூர் →

காட்டுமன்னார்கோவில் பள்ளிகளில் மதிய உணவில் துர்நாற்றம்! - ரேஷன் அரிசி காரணமா?

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் பகுதியை சுற்றியுள்ள அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் துர்நாற்றம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காட்டுமன்னார்கோவில் பள்ளிகளில் மதிய உணவில் துர்நாற்றம்! - ரேஷன் அரிசி காரணமா?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்க பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் சமைத்து வழங்கப்படும் உணவில் துர்நாற்றம் வீசுவதாக மாணவ, மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால், உணவை சாப்பிட முடியாமல் மாணவர்கள் உணவை கீழே கொட்டி பசியுடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவ, மாணவிகள் பள்ளி தலைமையாசிரியரிடம் முறையிட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து கல்வி அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இது குறித்து உணவு வழங்கல் அலுவலரிடம் கேட்ட போது, ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசியை மதிய உணவுத் திட்டத்திற்கு பயன்படுத்துமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். அரிசியால் துர்நாற்றம் வீசும் பட்சத்தில், மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, மதிய உணவு திட்டத்திற்கு தரமான அரிசியை வழங்க மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப் பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !