← முகப்புகடலூர் →

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 8 அடி நீள ராட்சத முதலை

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே அதிகாலை நேரத்தில் அரங்கேறிய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த ராட்சத முதலை, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தின் முழு விவரங்களைப் பார்க்கலாம்.

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 8 அடி நீள ராட்சத முதலை

சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த 8 அடி நீள ராட்சத முதலை, ஒருவரைக் கடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ள கோப்பாடி கிராமத்தில், ராஜன் வாய்க்காலில் இருந்து சுமார் 8 அடி நீளமும், 300 கிலோ எடையும் கொண்ட ராட்சத முதலை ஒன்று இன்று அதிகாலை குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் முதலை குடியிருப்புப் பகுதியில் புகுந்த நிலையில், அங்கிருந்த நாய்கள் தொடர்ந்து குரைத்துள்ளது. இதன் சத்தம் கேட்டு வெளியே வந்த ராஜேந்திரன் என்ற 44 வயது நபரை முதலை திடீரென கண்டித்துள்ளது. இதனால் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அப்பகுதி மக்கள் காயமடைந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காலை 8 மணி வரை முதலை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குடியிருப்புப் பகுதியில் சுற்றித்திரிந்த ராட்சத முதலையைப் பாதுகாப்பாகப் பிடித்து எடுத்துச் சென்றனர்.

அதிகாலை நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த முதலை ஒருவரைக் கடித்த சம்பவம் கோப்பாடி கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ராஜன் வாய்க்கால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முதலைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !