அந்த மனுவில், பண்ருட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் இதர அரசு நிதிகள் மூலம் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் சில பகுதிகளில் நூலகம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ., மோகன் கூறியதாவது:
Buy Now ! Pay Daily !
மக்களின் கோரிக்கைகளை ஏற்று, பண்ருட்டி தொகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த கடலூர் மாவட்ட அமைச்சரின் உதவியாளர் எனக் கூறிக்கொள்ளும் வீரமணி, அரசு பணிகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தன்னிடம் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என அதிகாரிகளை மிரட்டி வருகிறார்.
மேலும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளைச் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்துள்ளேன்.
வெற்றி வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்குவதற்காக, த.வெ.க.,வினர் பயனாளிகளிடம் பணம் வசூலிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கும்போது, தகுதியான பயனாளிகளைத் தேர்வு செய்து வீடுகள் வழங்க வேண்டும்.
மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் த.வெ.க., எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்" என எம்.எல்.ஏ., மோகன் தெரிவித்துள்ளார்.






