← முகப்பு
அண்மைச் செய்திகள்

அண்மைச் செய்திகள்

பக்கம் 8 / 30
சினிமா

அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த சமந்தா! - குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

நடிகை சமந்தா ரூத் பிரபு மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமொரு தம்பதிக்கு நவம்பர் 19, 2026 அன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து, குழந்தையின் பெயரையும் அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

கார்த்திகை திருநாளில் கனமழைக்கு வாய்ப்பு!

வங்கக்கடலில் உருவான 'அக்வான்' புயல் ஒடிசா கடற்கரையைக் கடந்து வலுவிழந்து வரும் சூழலில், தமிழகத்தில் வரும் நவம்பர் 23 முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படும் நவம்பர் 24-ஆம் தேதி திருவண்ணாமலை உட்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நிபந்தனைகளோடு தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

PF உறுப்பினர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்!

PF உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் EPFO முக்கியமான மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஓய்வுபெறும் ஊழியர்கள் தங்களது PF சேமிப்பை மாதந்தோறும் தவணை முறையில் பெறும் புதிய திட்டம், 90% வரை PF பணத்தை எடுக்கும் வசதி மற்றும் முழுத் தொகையைப் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 12 மாதங்களில் இருந்து 2 மாதங்களாகக் குறைப்பு எனப் பல முக்கிய அறிவிப்புகளை பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அரசியல்

அமைச்சர் கீர்த்தனாதான் தவெகவின் துரந்தர்!? – கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி!

TN Guidance முகமையில் இருந்து ஆந்திராவுக்கு முதலீட்டு நிறுவன தகவல்கள் கசிந்ததாக 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான அறிவிப்பு குறித்து பேசியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய அரசு செய்த தவறை ஊழியர்கள் மீது சுமத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சினிமா

ராவணன் நியாயமான மன்னரா? - நிதிஷ் பரத்வாஜ் கடும் சாடல்!

பி.ஆர். சோப்ராவின் புகழ்பெற்ற ‘மகாபாரதம்’ தொடரில் கிருஷ்ணராக நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நிதிஷ் பரத்வாஜ், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்து வெளியாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தப் படத்தை ஒரு "அஜெண்டா திரைப்படம்" என்று வர்ணித்துள்ள அவர், படத்தின் நிதி ஆதாரங்கள் குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து செய்திகள்

மாணவர்களைப் பொருட்களை அகற்றப் பயன்படுத்தியதா பள்ளி நிர்வாகம்? புதுச்சேரியில் பெற்றோர்கள் அதிருப்தி!

புதுச்சேரி புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளிப் பொருட்களை அகற்றும் பணியில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.

அனைத்து செய்திகள்

'AURA KID'ன் வைரல் போஸ் - பெற்றோருக்கு அடித்த லக்!

மகாராஷ்டிரா மாநிலத்தின் யவத்மால் பகுதியைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ருத்ரான்ஷ் சிங் தாக்கூர், தனது அசத்தலான தோரணையால் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளார். புதிய இருசக்கர வாகனத்தின் முன் கம்பீரமாக நின்று அவர் கொடுத்த போஸ் இணையத்தில் கோடிக்கணக்கான பார்வைகளைக் குவித்த நிலையில், அந்த வாகன விற்பனையக உரிமையாளர் அவரது முழுக் கல்விச் செலவையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

ஆசிரியர் பக்கம்

நகைக்கடை கொள்ளையில் மீனாட்சிக்குத் தொடர்பில்லை - பிரசாந்த் திட்டவட்டம்!

மதுரை தனிஷ்க் நகைக் கடைக் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளி நிஷாந்த், யூடியூபர் மீனாட்சிக்கும் கொள்ளைச் சம்பவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசியல்

தொழில் முதலீடு ரகசியங்கள் கசிந்தது எப்படி? – தமிழக அரசின் விளக்கம்!

தமிழ்நாட்டின் தொழில் முதலீடு ரகசியங்களை ஆந்திராவிற்கு கசியவிட்டதாக கூறி Guidance TN முகமையில் பணியாற்றிய 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர் பக்கம்

வலுவான நிலையில் இந்திய அணி!

நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணியை முதல் இன்னிங்ஸில் 368 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.