← முகப்பு

மாணவர்களைப் பொருட்களை அகற்றப் பயன்படுத்தியதா பள்ளி நிர்வாகம்? புதுச்சேரியில் பெற்றோர்கள் அதிருப்தி!

புதுச்சேரி புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில், பள்ளிப் பொருட்களை அகற்றும் பணியில் மாணவர்களை ஆசிரியர்கள் ஈடுபடுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.

மாணவர்களைப் பொருட்களை அகற்றப் பயன்படுத்தியதா பள்ளி நிர்வாகம்? புதுச்சேரியில் பெற்றோர்கள் அதிருப்தி!

புதுச்சேரி குயவர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள புதுப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி, மறுசீரமைப்புப் பணிகளை முன்னிட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. இதையொட்டி, பள்ளியில் உள்ள பொருட்களை அகற்றி, வளாகத்தைக் காலி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், பள்ளிக்கு கல்வி கற்க வந்த மாணவர்களைப் பள்ளிப் பொருட்களை அகற்றும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. படிப்பதற்காகப் பள்ளிக்கு வந்த மாணவர்களிடம் இத்தகைய பணிகளைச் செய்ய வைத்ததாகக் கூறப்படும் சம்பவம், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மாணவர்களின் கல்வி, பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய ஆசிரியர்களே, பள்ளிப் பொருட்களை அகற்றும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தியதாகக் கூறப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இச்சம்பவம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தி, புகாரின் உண்மைத்தன்மையைக் கண்டறிய வேண்டும் என்றும், புகார் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !