நடிகர் தனுஷ் நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ’ஓம்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று வெளியான நிலையில் காலை முதலே முக்கிய திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சியாக உள்ளது. பட வெளியீட்டைக் கொண்டாடும் வகையில் ரசிகர்கள் ப்ளெக்ஸ், கட் அவுட் என திரையரங்க வளாகங்களை அலங்கரித்து வருகின்றனர்.
அதில் பல இடங்களில் தனுஷின் அரசியல் பிரவேசத்திற்கு முகாந்திரம் கூறும் வகையில் ரசிகர்கள் வைத்துள்ள பேனர்கள் கவனம் பெற்றுள்ளன. கடந்த 24 ஆண்டுகளாக நடித்து வரும் தனுஷ், தமிழைத் தாண்டி இந்தி, ஹாலிவுட் என பல மொழிப்படங்களிலும் நடித்து நடிப்பிற்கென பல விருதுகளை வென்று தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அதை தொடர்ந்து தனுஷுக்கு அரசியல் ஆர்வம் உண்டாகியிருப்பதை கோலிவுட் வட்டாரமே கண்டுக் கொண்டுள்ளது.
Buy Now ! Pay Daily !
சமீபமாக தனுஷ் நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்திப்பது, ஆடியோ வெளியீட்டு விழா என அனைத்திலும் அவரது நற்பணி இயக்க கொடி பெருமளவில் முக்கியத்துவம் பெறுகிறது. ருத்திராட்ஷம், தாடி என தனுஷின் கெட்டப்பும் ரஜினி ஸ்டைல் ஆன்மீக அரசியல் எண்ட்ரியை நினைவுப்படுத்தும் விதமாகவே இருந்து வருகிறது. நற்பணி இயக்க நிர்வாகிகளும் தனுஷின் அரசியல் வருகைக்கு தயாரான நிலையிலேயே அவரது படங்களுக்கான பேனர்கள், கட் அவுட்களிலும் அதை குறியீடாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இன்று ஓம் படம் வெளியாகியுள்ள நிலையில் அதற்காக வைக்கப்பட்ட பேனர்களில் ’இயக்கத்தின் முதல்வரே’ என சூசகமாக குறிப்பிட்டிருந்தாலும், இயக்கத்தின் என்பதை சுருக்கி, ’முதல்வரே’ என்பதை பிரம்மாண்டமாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் TN 58 CM 2031 என குறியீடாக CM என்ற வார்த்தையையும் 2031 என்ற ஆண்டையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர். இதையெல்லாம் வெங்கட்பிரபு ’க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ படத்தில் விஜய்க்கு செய்தது சிலருக்கு நினைவுக்கு வரலாம்.
இதுபோன்ற சூசகமான சுட்டிக்காட்டல்கள் தொடர்ந்து தனுஷ் தனது அரசியல் பாதையை நோக்கி நகர்வதையே காட்டுவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.






