← முகப்பு

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நிபந்தனைகளோடு தீபம் ஏற்ற அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

கார்த்திகை திருநாளில் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கடந்த ஆண்டே சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், தமிழக அரசு அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சட்ட, ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் காட்டி தமிழக அரசு தடைக் கோரி வாதிட்டது.

நேற்று நடந்த உச்ச நீதிமன்ற அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு நாளை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது தீர்ப்பு வெளியிட்டுள்ள உச்சநீதிமன்றம் முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த அனுமதிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சில நிபந்தனைகளுடன் தீபத்தூணில் தீபம் ஏற்றவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அதன்படி, தீபத்தூணில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மட்டுமே செல்ல வேண்டும். தீபம் ஏற்றும் பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. தீபம் ஏற்றும் இடத்தில் கோஷங்கள் எழுப்பக் கூடாது. தேவைப்பட்டால் CISF படையை பாதுகாப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவு தற்காலிகமானது மட்டுமே என்றும், இதை நிரந்தர உத்தரவாக கருதக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !