← முகப்பு
அண்மைச் செய்திகள்

இராமநாதபுரம்

பக்கம் 1 / 1
இராமநாதபுரம் கடற்கரை! காவல்துறை, கடற்படை, சுங்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒரே மேடையில் அதிரடி ஆலோசனை – கடத்தல், விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வியூகம்!இராமநாதபுரம்

கடல் வழிக் கடத்தலுக்கு கடிவாளம்: போதைப்பொருள் கும்பல்களுக்கு நெருக்கடி!

கடல் வழியாகவும் தரைவழியாகவும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிரடி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் அரசு கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

இராமநாதபுரம்

கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம்

திடீர் கனமழையால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கடலுக்கு சென்ற மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பியுள்ளனர். மேலும் அதிகாரிகள் தங்களுக்கு வானிலை குறித்தான அறிவிப்புகளை சரியாக வழங்குவதில்லை என குற்றஞ்சாட்டினர்.

இராமநாதபுரம்

இலவச பட்டா கோரி மீனவ குடும்பங்கள் ஆட்சியரிடம் மனு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு!இராமநாதபுரம்

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர் - கலெக்டரிடம் மனு!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே செவல்பட்டி கிராமத்தில் கோயில் கட்டுவதற்கு நன்கொடை வழங்கியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, 14 குடும்பங்களை அக்கிராம நிர்வாகிகள் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களுக்கான நிவாரணத் தொகையும் அதிகரிக்க நடவடிக்கைஇராமநாதபுரம்

இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் - அமைச்சர் ஸ்ரீகாந்த் உறுதி!

முத்துப்பேட்டை மீனவர் நலச் சங்க அலுவலகத்தை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அரிசி, பருப்பு, பால் என அடுத்தடுத்து விலை உயர்வு – வருமானம் உயராமல் வாழ்க்கைச் செலவு மட்டும் உயர்வதால் கூலித் தொழிலாளர்கள் தவிப்பு;இராமநாதபுரம்

விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை! ஏழை, எளிய மக்கள் கடும் அவதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே டெங்குவுக்கு பலியான 4 வயது குழந்தை!

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள வல்லக்குளம் கிராமத்தில், சுகாதாரத்துறையினரின் அலட்சியத்தாலும், ஊராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்காலும் 4 வயது பச்சிளம் குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், மக்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டியை கட்டிலில் தூக்கிச் செல்லும் கிராம மக்கள்.இராமநாதபுரம்

ஆம்புலன்ஸ் செல்வதற்குக் கூட சாலை இல்லை!

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கடந்த 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாகக் கிடக்கும் கிராம இணைப்புச் சாலை, தற்போது பெய்த மழையால் சகதிக் காடாக மாறியுள்ளதால், அவசர சிகிச்சை தேவைப்பட்ட மூதாட்டியை கிராம மக்கள் கட்டிலில் தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.