குழந்தைகளின் முகத்தில் புன்னகை... கைகளில் கேக்... பள்ளி வளாகம் முழுவதும் உற்சாகம்! குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் டாக்டர் வி.கே. ராஜீவ் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு கேக் வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
Reach our readers. Contact us to advertise in this space.
இந்தப் பள்ளியில் பயிலும் 191 குழந்தைகளுக்கு கேக் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் உள்ள 1,292 பள்ளிகளில் பயிலும் 1,34,812 குழந்தைகளுக்கும் ஒரே நாளில் கேக் வழங்கி குழந்தைகள் தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.
குழந்தைகளின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, பள்ளி மாணவ, மாணவியர்களிடையே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை ஆணையரும், ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டாக்டர் வள்ளலார், மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், ராமநாதபுரம் வட்டாட்சியர் பழனிகுமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






