ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் அருகே அய்யன் தோப்பு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன.
இப்பகுதி மக்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, கடந்த பல ஆண்டுகளாக அரசிடமும் மாவட்ட அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்துள்ளனர்.
Buy Now ! Pay Daily !
எனினும், தங்களது நீண்டகாலப் பிரச்சினைக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மீன்பிடித் தொழில் மற்றும் அன்றாட கூலி வேலையை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தனர்.
மேலும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் சிரமப்படுவதாகக் குறிப்பிட்டனர்.
நிரந்தர வீட்டு வசதியின்றி வாழ்ந்து வரும் தங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினால், சொந்த இடத்தில் பாதுகாப்பாக வீடு அமைத்து நிம்மதியாக வாழ முடியும் என்றும் தெரிவித்தனர்.
எனவே, 500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களின் பல ஆண்டு காலக் கோரிக்கையை இனியும் தாமதிக்காமல் பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.






