← முகப்புஇராமநாதபுரம் →

ராமநாதபுரத்தில் அரசு கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழக கிராம சுகாதார செவிலியர்கள், தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையின் கீழ், கிராமப்புற மக்களுக்கு நேரடி மருத்துவ மற்றும் சுகாதார சேவைகளை வழங்கி வருகின்றனர்.

கிராம மக்களின் சுகாதாரப் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றும் கிராம செவிலியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக தங்களது பணிப்பலன் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வப்போது போராடி வருகின்றன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்நிலையில் தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்குமா? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு கிராம செவிலியர்கள் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிராம செவிலியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் குறிப்பாக கிராம செவிலியர்களின் பணிகளில் இடைநிலை பணியாளர்கள் ஈடுபடுவதை உடனடியாக கைவிட வேண்டும், செவிலியர்களின் நீண்டகால கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளை அரசு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாவட்டத் தலைவர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளர் ஜெனிட்டா மேரி, மாவட்டப் பொருளாளர் ராஜேஸ்வரி, மாவட்டத் துணைத்தலைவர் ஜெயமுனீஸ்வரி, கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சியா, மாவட்டப் பிரச்சாரச் செயலாளர் செந்தில்ராணி, மாவட்ட அமைப்புச் செயலாளர் சாந்தி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

கிராமப்புற மக்களின் சுகாதார சேவையில் அயராது பணியாற்றும் தங்களது நியாயமான கோரிக்கைகளை அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !