ராமநாதபுரம் மாவட்டம், முத்துப்பேட்டை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்துப்பேட்டை மீனவர் நலச் சங்க அலுவலகத்தை தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் திறந்து வைத்தார். தொடர்ந்து உலக மீனவர் தினத்தைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி மீனவர்களுக்கு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஸ்ரீநாத் கூறியதாவது: கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பயன்படுத்தும் ஜிபிஎஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு கருவிகளை வாங்குவதற்கான மானியத் தொகை உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Buy Now ! Pay Daily !
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மீனவர்கள் திருப்தியடையும் வகையில் நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது தாக்கப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், மீனவர்கள் வேண்டுமென்றே கடல் எல்லையைத் தாண்டிச் செல்வதில்லை. காற்றின் வேகம் மற்றும் கடல் அலைகளின் தாக்கத்தால் படகுகள் எல்லை தாண்டிச் செல்லும் நிலை ஏற்படுகிறது.
இதுதொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும், மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளில் தமிழக அரசு முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு மத்திய அரசும் ஆதரவாக இருப்பதாக அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.






