← முகப்பு

விஜய் மாமா வந்திருக்காரு.. உற்சாகமான குழந்தைகள்! – குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!

இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்படும் நிலையில் முதல்வர் விஜய், கொளத்தூரில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்கு கேக் வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

விஜய் மாமா வந்திருக்காரு.. உற்சாகமான குழந்தைகள்! – குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!

நவம்பர் 14ம் தேதி நாடு முழுவதும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் ’குழந்தைகள் தினமாக’ கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சியமைத்துள்ள நிலையில் இந்த ஆண்டு குழந்தைகள் தினத்திற்கு அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் கேக் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதற்காக ரூ.9.27 கோடிக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டு மாவட்ட கல்வி அலுவலர்கள், அதிகாரிகள் ஒருங்கிணைந்து அனைத்து பள்ளிகளுக்குமான கேக் விநியோகத்தை மேற்கொண்டனர். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் என மொத்தம் 61 லட்சம் பேருக்கு சுவையான கேக் இன்று வழங்கப்படுகிறது.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகளில் தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் இந்த கேக் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கின்றனர். முதலமைச்சர் ஜோசப் விஜய், கொளத்தூர் தொகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெற்று வரும் குழந்தைகள் தின விழாவில் கலந்துக் கொண்டார். அங்கு மாணவ, மாணவியருக்கு அவர் கையாலேயே கேக் வழங்கியதுடன், சில மாணவர்களுக்கு ஊட்டியும் விட்டார். அனைத்து மாணவர்களுக்கும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டையையும் முதல்வர் விஜய் வழங்கினார். அந்த வாழ்த்து அட்டையில் ’இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்’ என்றும், ஆல் இஸ் வெல், கான்ஃபிடண்டா இருங்க, பிரியமுடன் விஜய் என்றும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

அதன் பின்னர் முதலமைச்சர் விஜய் முன்பாக பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடித்து காண்பித்தனர். சில மாணவர்கள் தவெக கொள்கை தலைவர்கள் போன்ற மாறுவேடங்களிலும் வந்து அசத்தினர்.

தொடர்ந்து பள்ளி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கொளத்தூர் தொகுதிக்கான நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைக்க உள்ளார் முதல்வர் விஜய். இதற்காக கொளத்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.