← முகப்புகரூர் →

கரூர் அருகே இறந்தும் வாழும் மனிதம்! கணவணை இழந்த இளம் பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்தவருக்கு அரசு மரியாதை செலுத்திய கரூர் சார் ஆட்சியர்

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், மின்னாம்பள்ளி கிராமம், சங்கரம்பாளையம் என்ற முகவரியைச் சேர்ந்த துரைசாமி மற்றும் ருக்குமணி தம்பதியரின் மகன் சிவசந்துரு(வயது 32) என்பவர் கடந்த நவ.07 தேதியன்று ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

உடல் உறுப்புகள் தானம்

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

இறந்தவருக்கு வினோதினி என்ற மனைவியும் (வயது25) மற்றும் மகள் யாழினி (வயது 2) உள்ளனர். இந்நிலையில், அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள் மருத்துவ விதிமுறைகளின்படி தானமாகப் பெறப்பட்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்த மூன்று நோயாளிகளுக்கு மறுவாழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இரண்டு சிறுநீரகம் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் கோயம்புத்தூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டது.

அரசு மரியாதை அளித்த அதிகாரிகள்

மரணமடைந்த பின் அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்குபவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக அரசு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மின்னாம்பள்ளி கிராமம், சங்கரம்பாளையம் என்ற முகவரியைச் சேர்ந்த துரைசாமி மற்றும் ருக்குமணி தம்பதியரின் மகன் சிவசந்துரு(வயது 32) என்பவருக்கு நேற்று 12/11/2026 இறுதி சடங்கு மண்மங்கலம் வட்டம், மின்னாம்பள்ளி கிராமம், சங்கரன்பாளையம் ஊர் மயானத்தில் நடைபெற்றது.

இந்த இறுதிச் சடங்கில் தமிழ்நாடு அரசு சார்பில் கரூர் சார் ஆட்சியர் இ.கார்த்திகேயன் மற்றும் மண்மங்கலம் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்துறை அரசு அதிகாரிகள் இறுதி மரியாதை செலுத்தினர்.

கரூர் கலெக்டர் இரங்கல்

இந்த துயரமான சூழ்நிலையிலும் மனிதநேயத்துடன் செயல்பட்டு, தங்களது குடும்ப உறுப்பினரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்த குடும்பத்தினரின் செயல் பாராட்டுக்குரியது. அன்னாரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், ஒருவரின் உயிரிழப்பு பலரின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் தனது இரங்கல் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இளம் வயதில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்த குடும்பத்தினரின் மனிதநேயமிக்க செயலை சமூக வலைதளங்களில் நெடிஷணங்களில் பாராட்டிகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.