← முகப்பு

7 கோடிக்கு AI-ல் உருவாக்கிய புத்தகங்கள்? தமிழகத்தை உலுக்கும் புத்தக ஊழல்!

சமீபத்தில் கோவை பெரியார் அறிவுலகத்தில் ஏஐ மூலமாக உருவாக்கப்பட்ட போலி புத்தகங்கள் கண்டறியப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழகம் முழுவதும் பல நூலகங்களில் இந்த போலி புத்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 கோடிக்கு AI-ல் உருவாக்கிய புத்தகங்கள்? தமிழகத்தை உலுக்கும் புத்தக ஊழல்!

மாணவர்களின் அறிவை வளர்க்க புத்தகங்கள் அவசியமானதாக உள்ள நிலையில், இளைஞர்கள், சிறுவர்கள் என பலத்தரப்பட்ட மக்களும் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும்படியான விலை கூடுதலாக உள்ள புத்தகங்களை அரசு நூலகங்கள் கொள்முதல் செய்து அறிவு வளர்ச்சிக்காக உதவுகிறது. அப்படியான அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையான நூலகங்களில் சமீப காலமாக போலியான புத்தகங்கள் கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு பதிப்பகம், பீனிக்ஸ் பதிப்பகம் என்ற பெயரில் ஏஐ பயன்படுத்தி போலியான புத்தகங்களை உருவாக்கி நூலகத்திற்கு விற்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து இந்த ஏஐ போலி புத்தகங்கள் அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம் தொடங்கி தென்காசி மாவட்ட நூலகம் வரை பல பகுதிகளில் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யார்? நூல்கள் கொள்முதல் செய்ய மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள் என்ன? என்பது பற்றி கேள்வி எழுப்பியுள்ள நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பதிப்பகங்களையும் பூட்டி சீல் வைக்கவும், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டிருந்தது.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.

அதை தொடர்ந்து சமீபத்தில் பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இதுவரை போலி ஏஐ புத்தகங்கள் மொத்தம் 70,674 புத்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இவற்றின் மதிப்பு ரூ.7 கோடி இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள், இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு பாதை அமைக்கக்கூடிய நூலகங்களில் இப்படி ஒரு புத்தக மோசடி நடந்திருப்பது பல எழுத்தாளர்களையும், வாசகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

BNBP Shopping

Reach our readers. Contact us to advertise in this space.