இதன் ஒரு பகுதியாக, அரியலூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் பங்கேற்ற மழலையர் மற்றும் பள்ளி மாணவர்கள், ஜவஹர்லால் நேருவைப் போல வெள்ளை நிற உடை, தொப்பி மற்றும் சட்டையில் சிவப்பு ரோஜாப்பூ அணிந்து நேரு வேடமணிந்து பள்ளிக்கு வருகை தந்தனர். மேடையில் தோன்றிய சிறுவர்கள், நாட்டின் சுதந்திரப் போராட்டத்திலும், நவீன இந்தியாவை உருவாக்குவதிலும் நேரு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு குறித்தும், அவரது பெருமைகள் குறித்தும் மழலை மாறாத குரலில் உரையாற்றினர். சட்டையில் ரோஜாப்பூவுடன் வலம் வந்த சிறுவர்களைப் பார்க்கும்போது, நேருவே நேரில் கண்முன் நிற்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாக ஆசிரியர்களும், பெற்றோர்களும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இவ்விழா பள்ளி வளாகத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது
தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா: நேரு வேடமணிந்து அசத்திய சிறுவர்கள்!
இந்தியா முழுவதும் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை சனிக்கிழமை பள்ளி விடுமுறை தினம் என்பதால், இன்று (நவம்பர் 13) அரியலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளில் குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.






