← முகப்பு

அந்த பையனுக்கு பயமே இல்ல! : உலக சாதனை படைத்த வைபவ்!

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

அந்த பையனுக்கு பயமே இல்ல! : உலக சாதனை படைத்த வைபவ்!

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பையில், ஆசிய நாடுகளின் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கும், 'ஏ' அணிகளுக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் இரண்டாவது சீசன் 'ரைசிங் ஸ்டார்ஸ்' ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரில், 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள திலக் வர்மா தலைமையிலான இந்தியா 'ஏ' அணி, அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க கட்டாய வெற்றி என்ற நெருக்கடியுடன் தனது கடைசி லீக் போட்டியில் யு.ஏ.இ அணியை எதிர்கொண்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த யு.ஏ.இ அணி, ஹர்பிரீத் சிங்கின் சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது.

வைபவ் சூர்யவன்ஷியின் வாணவேடிக்கை

இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 'ஏ' அணிக்குத் தொடக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான தொடக்கத்தை அளித்தார்.

ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்தே சிக்சர் மழை பொழிந்த அவர், 16 பந்துகளில் அரைசதத்தையும், 28 பந்துகளில் சதத்தையும் எட்டினார்.

தொடர்ந்து பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்த வைபவ், 40 பந்துகளில் 150 ரன்களையும், 52 பந்துகளில் இரட்டைச் சதத்தையும் பூர்த்தி செய்து வரலாறு படைத்தார்.

மொத்தம் 53 பந்துகளைச் சந்தித்த வைபவ் சூர்யவன்ஷி 28 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 204 ரன்கள் குவித்து பசில் ஹமீது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இவரது ருத்ர தாண்டவத்தால் இந்திய அணி வெறும் 14.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 254 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

முறியடிக்கப்பட்ட உலக சாதனைகளின் பட்டியல்

இந்த ஒரே இன்னிங்ஸின் மூலம் 'லிஸ்ட் ஏ' ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பல முக்கியச் சாதனைகளை வைபவ் சூர்யவன்ஷி தன்வசப்படுத்தியுள்ளார்:

அதிவேக இரட்டைச் சதம்: 52 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு நியூசிலாந்தின் சாட் போவ்ஸ் 103 பந்துகளுடன் முதலிடத்திலும், தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் தலா 114 பந்துகளுடன் அடுத்தடுத்த இடங்களிலும் இருந்தனர்.

அதிவேக சதம் மற்றும் 150 ரன்கள்: லிஸ்ட் ஏ போட்டிகளில் 28 பந்துகளில் அதிவேக சதமடித்து ஆஸ்திரேலியாவின் ஜேக் பிரேசர்-மெக்குர்க்கின் 29 பந்துகள் சாதனையை முறியடித்தார். மேலும், 40 பந்துகளில் 150 ரன்களை எட்டி, கடந்த 2025-ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்திற்கு எதிராகத் தானே படைத்திருந்த 50 பந்துகள் சாதனையையும் தகர்த்தார்.

அதிக சிக்சர்கள்: ஒரு இன்னிங்ஸில் 28 சிக்சர்கள் விளாசியதன் மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் டார்சி ஷார்டின் 23 சிக்சர்கள் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் தன்மே அகர்வாலின் 26 சிக்சர்கள் சாதனைகளை முறியடித்தார்.

ஒருநாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி ஒட்டுமொத்தமாக அடித்த 26 சிக்சர்கள் சாதனையை வைபவ் தனிநபராகக் கடந்துள்ளார்.

சிறந்த ஸ்டிரைக் ரேட்: 384.90 என்ற ஸ்டிரைக் ரேட்டைப் பதிவு செய்து, தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸின் 338.63 ஸ்டிரைக் ரேட் சாதனையைப் பின்னுக்குத் தள்ளினார்.

இளம் வயது இரட்டைச் சத நாயகன்: 15 வயது 242 நாட்களில் இரட்டைச் சதம் அடித்ததன் மூலம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இளம் வயதில் இம்மைல்கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்பு மும்பை வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17 வயதில் இரட்டைச் சதம் (203 ரன்கள்) அடித்ததே சாதனையாக இருந்தது.

2027 ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சூர்யவன்சியின் இந்த ருத்ரதாண்டவம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !