← முகப்பு

எச்சிலை பயன்படுத்த ஏன் இன்னும் தடை?

நியூசிலாந்து அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த பிறகு செய்தியளார்களை சந்தித்த சுப்மன் கில், ஐசிசி விதிகள் தொடர்பான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

எச்சிலை பயன்படுத்த ஏன் இன்னும் தடை?

நியூசிலாந்து நாட்டிற்கு சென்றுள்ள இந்திய அணி T20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே T20 மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றுள்ள நிலையில், தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ள நிலையில், போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், போட்டிகள் நடைபெறும் போது பந்துகள் நன்றாக ஸ்விங் ஆவதற்கு பந்தை பளபளப்பாக்க வேண்டும். அதற்கு வீரர்கள் தங்கள் எச்சிலை பயன்படுத்தி பந்தை பளபளப்பாக மாற்றுவர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

ஆனால் இந்த நடைமுறை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை ஐசிசி இன்னும் ஏன் தொடர்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆடுகளத்தின் தன்மை மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

கோவிட் கால விதி இனி தேவையா?

கோவிட் காலம் கடந்து நீண்ட நாட்களாகிவிட்ட நிலையில், பந்தின் ஒரு பகுதியைச் சிறப்பாகப் பராமரிக்க எச்சில் பயன்படுத்துவது ஏன் இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்பது புரியவில்லை என்று அவர் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தக் கொண்டுவரப்பட்ட இந்த விதி, செப்டம்பர் 2022-ல் நிரந்தரமாக்கப்பட்டது. இருப்பினும், தற்போதைய சூழலில் அதன் அவசியம் குறித்து கில் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பழைய பந்தை வைத்து ரிவர்ஸ் ஸ்விங் கொண்டுவரவும், பந்தின் பளபளப்பைத் தக்கவைக்கவும் எச்சில் பெரிதும் உதவியாக இருந்து வந்தது. இப்போது வியர்வை மட்டுமே பயன்படுத்தி பந்தை பளபளப்பாக்க அனுமதிக்கப்படும் நிலையில், ஆடுகளத்தில் இருந்து பெரிதாக உதவி கிடைக்காத நேரங்களில் பந்து வீசுவது கடினமாக இருப்பதாக கில் சுட்டிக்காட்டினார்

இதானல் சுமார் 25 முதல் 30 ஓவர்களிலேயே பந்து மிகவும் மென்மையாகிவிடுவதாகவும், விக்கெட்டுகளை வீழ்த்துவது சவாலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முதல் டெஸ்ட் போட்டியுன் கடைசி நாளில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பெரிதாக விக்கெட்டுகள் எதுவும் கிடைக்கவில்லை; பந்து பேட்டின் முனையில் பட்டுச் செல்லும் கேட்ச்களும் எளிதாக அமையவில்லை என்றும் கூறினார்,

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 368 ரன்கள் எடுத்த நிலையில், இந்தியா 702/9 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கடைசி நாளில் நியூசிலாந்து பேட்டர்கள் டேரில் மிட்செல் மற்றும் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் நீண்ட நேரம் நிலைத்து நின்று போராடி, 239/5 என்ற நிலையில் போட்டியை டிராவில் முடித்தனர்.

அழுத்தம் கொடுத்தும் வெற்றி பெற முடியாதது ஏமாற்றமளிப்பதாகக் கூறிய கில், சமீப காலமாக டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவது அரிதானது என்றும், ஆகஸ்ட் மாதம் கொழும்பில் இலங்கைக்கு எதிரான டெஸ்டுக்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்திருப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !