அடுத்த வருடம் மார்ச்சில் தொடங்கவுள்ள ஐபிஎல் 2027 தொடருக்கான ஏலம் கோவாவில் நடைபெறவுள்ளது.
இந்த ஏலத்தில் மொத்தமுள்ள 66 காலியிடங்களை நிரப்புவதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 1,220 வீரர்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
Buy Now ! Pay Daily !
மொத்தமுள்ள 66 இடங்களில், 25 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பட்டியலில் 14 இந்திய வீரர்கள் மற்றும் 170 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 184 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத 925 இந்திய வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 127 பேர் ஏற்கெனவே ஐபிஎல் தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.
அடுத்ததாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வெளிநாட்டு வீரர்கள் 69 பேர் மற்றும் துணை உறுப்பு நாட்டு வீரர்கள் 42 பேர் ஏலத்திற்காக விண்ணப்பித்துள்ளனர்.
வெளிநாட்டு வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவிலிருந்து அதிகபட்சமாக 53 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதற்கடுத்தபடியாகத் தென் ஆப்பிரிக்கா 40, வெஸ்ட் இண்டீஸ் 36, நியூசிலாந்து 25, ஆப்கானிஸ்தான் 23, இலங்கை 21, இங்கிலாந்து 16 மற்றும் வங்கதேசம் 12 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
துணை உறுப்பு நாடுகளைப் பொறுத்தவரை அமெரிக்காவிலிருந்து 13 வீரர்களும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளத்திலிருந்து தலா 10 வீரர்களும் பதிவு செய்துள்ளனர். மேலும் அயர்லாந்து 7, ஜிம்பாப்வே 6, நெதர்லாந்து 3 மற்றும் கனடா, ஜப்பான், ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து தலா 2 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அணிகளிடம் எஞ்சியுள்ள தொகை மற்றும் காலியிடங்கள்
10 ஐபிஎல் அணிகளிடமும் சேர்த்து தற்போது மொத்தம் ரூ.295.60 கோடி ஏலத் தொகையாக எஞ்சியுள்ளது. இதில் அதிகபட்சமாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் ரூ.47.45 கோடியும், குறைந்தபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ரூ.8.75 கோடியும் கையிருப்பில் உள்ளது.
பதிவு செய்த 1220 வீரர்களில் யார் எந்த அணியால் ஏலத்தில் தேர்வாகப் போகிறார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.






