← முகப்பு

டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை எடுக்க இந்திய அணி திணறியதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

டிராவில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி!

நியூசிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, T20, ஓடிஐ மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று ஃபார்மட்டுகளிலும் விளையாடி வருகிறது.

ஏற்கனவே T20 மற்றும் ஓடிஐ தொடர்களை வென்றுள்ள இந்திய அணி, டெஸ்ட் தொடரிலும் வெல்லும் முனைப்பில் களமிறங்கியது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

நியூசிலாந்தின் வெலிங்க்டன் நகரில் நவம்பர் 19ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போடியில், டாஸ் வென்ற இந்திய அணி நியூசிலாந்து அணியை பேட்டி செய்ய அழைத்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலந்து வீரர்கள் திணறிய நிலையில், பின்னர் சுதாரித்து கொண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஹென்றி நிக்கோல்ஸ் மற்றும் பிலிப்ஸின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 368 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இரண்டாம் நாள் இதனை சேஸ் செய்த இந்திய அணியின் ஓப்பனர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடர்ந்து மூன்று மற்றும் நான்காவது நாட்களில் ஆதிக்கம் செலுத்திய இந்ந்திய அணி முதல் இன்னிங்ஸுக்கு 720 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ராகுல் 136 ரன்கள், படிக்கல் 80 ரன்கள், கில் 98 ரன்கள், பண்ட் 128 ரக்னளை குவித்தனர். 720 ரன்களை சேர்த்தது மூலம் நியூசிலாந்து அணிக்கு 352 ரன்களை இலக்காக தந்து பேட்டிங் செய்ய அழைத்தது.

நான்காவது நாள் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து அணி, தொடக்கத்திலேயே கேப்டன் டாம் லேதமின் விக்கெட்டை இழந்தது. அவரை தொடர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்த டெவான் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் நிலைத்து நின்று ஆடினர்.

ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கும்போது, நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களுடன் இருந்தது. இந்தியாவுக்கு வெற்றி பெற 8 விக்கெட்டுகள் தேவைப்பட்டன.

இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசி அணி தொடக்கத்திலிருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் செஷனில் நியூசிலாந்து 38 ரன்கள் மட்டுமே எடுத்த போதிலும், செட்டான பேட்டர்களான டெவோன் கான்வே (65) மற்றும் ரச்சின் ரவீந்திரா (37) ஆகியோரின் விக்கெட்டுகளை வாஷிங்டன் சுந்தர் மற்றும் பிரசித் கிருஷ்ணா வீழ்த்தி இந்தியாவுக்கு நம்பிக்கை அளித்தனர்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, டாம் பிளண்டெல் அன்ஷுல் கம்போஜ் பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த செஷனில் இந்தியாவுக்குக் கிடைத்த ஒரே விக்கெட் இதுதான். தேநீர் இடைவேளையின்போது நியூசிலாந்து 206/5 என்ற நிலையில் வலுவாக இருந்தது.

கடைசி செஷனில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் புதிய பந்தை எடுத்தும், பல்வேறு மாற்றங்களைச் செய்தும் விக்கெட்டுகளை எடுக்கப் போராடினர். ஆனால் டேரில் மிட்செல் மற்றும் முதல் இன்னிங்ஸ் சதநாயகன் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் ஆறாவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்து, சுமார் 258-க்கும் மேற்பட்ட பந்துகளைச் சந்தித்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக ஆட்டமிழக்காமல் நின்றனர்.

ஓவர்கள் வேகமாகக் கடந்த நிலையில், ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜுரெல் போன்ற பகுதிநேரப் பந்துவீச்சாளர்களும் பயன்படுத்தப்பட்டனர். இறுதியில் வெற்றி சாத்தியமில்லை என்ற நிலையில், இரு அணிகளும் போட்டியை டிராவில் முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டன.

இந்த போட்டியில் நிகழ்ந்த வரலாற்றுச் சாதனைகள்

  • இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா குவித்த 720/9 டிக்ளேர் என்ற ஸ்கோர், நியூசிலாந்து மண்ணில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச டெஸ்ட் அணியின் ஸ்கோர் ஆகும். இதன் மூலம் வங்கதேசத்துக்கு எதிராக நியூசிலாந்து எடுத்த 715/6 டிக்ளேர் சாதனையை இந்தியா முறியடித்தது.
  • மேலும் முதல் ஆறு விக்கெட் கூட்டணிகளும் குறைந்தது 50 ரன்கள் சேர்த்த அரிய சாதனையை இந்தியா இந்த இன்னிங்ஸில் நிகழ்த்தியது. டெஸ்ட் வரலாற்றில் இந்தச் சாதனையை இரண்டு முறை செய்த முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.

ஆடுகளம் பேட்டிங்குக்கு மிகவும் சாதகமாகவும், இறுதி நாட்களில் பந்துவீச்சாளர்களுக்குப் பெரிய அளவில் உதவி செய்யாததாகவும் இருந்ததால், 352 ரன்கள் முன்னிலை பெற்றும் இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லை. இந்த டிரா, இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வாய்ப்புகளுக்கு ஒரு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 27, 2026 அன்று கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !