← முகப்புநாமக்கல் →

திருச்செங்கோடு தெப்பக்குளத்தில் மிதந்த சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!

திருச்செங்கோடு தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

திருச்செங்கோடு தெப்பக்குளத்தில் மிதந்த சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள தெப்பக்குளத்தின் வடபுறத்தில், தேவனாங்குறிச்சி சாலை திரும்பும் பகுதியில் இன்று காலை ஆண் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள், திருச்செங்கோடு நகர போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், குளத்தில் மிதந்த சடலத்தை மீட்டனர். சிவப்பு நிற பனியன், கருப்பு நிற டிராயர் அணிந்திருந்த அந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு நேரில் வந்த ஏஎஸ்பி அஸ்வினி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மீட்கப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் மலையடிக்குட்டை பகுதியைச் சேர்ந்த டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநர் ரமேஷ் என்பது தெரியவந்தது.

அவர் தெப்பக்குளத்திற்கு வந்ததற்கான காரணம் என்ன, உயிரிழந்தது எப்படி, இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !