அப்போது, ஆண்டிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் விசைத்தறி கூடத்திற்குள் நுழைந்த அமைச்சர், அங்கு உற்பத்தி செய்யப்படும் வேட்டி மற்றும் சேலைகளின் நீளம், அகலம் மற்றும் நூலின் தரத்தை நேரில் சோதனை செய்தார். இதில், அரசு நிர்ணயித்த அளவுகளை விடக் குறைவாகவும், தரமற்ற முறையிலும் வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
இதனால் அதிருப்தியடைந்த அமைச்சர், அங்கிருந்த விசைத்தறி உரிமையாளரிடம் கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். "கடந்த காலங்களை விட தற்போதைய அரசு விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. அப்படியிருக்கையில், ஏழை மக்கள் பயன்படுத்தும் வேட்டி, சேலைகளைத் தரமில்லாமல் தயாரிப்பது எந்த விதத்தில் நியாயம்? அரசு நிர்ணயித்த தரக்கட்டுப்பாட்டுடன் தயாரித்தால் மட்டுமே அவை கொள்முதல் செய்யப்படும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
Buy Now ! Pay Daily !
மேலும், உடனிருந்த துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்த அமைச்சர், இப்பகுதியில் உள்ள அனைத்து விசைத்தறி கூடங்களிலும் தொடர் ஆய்வு மேற்கொண்டு, தரத்தை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அமைச்சரின் இந்த ரகசிய ஆய்வால், இப்பகுதியில் தரமற்ற முறையில் வேட்டி, சேலைகள் தயாரிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளதுடன், விசைத்தறி உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் ஆய்வின் போது கைத்தறித்துறை அமைச்சருடன் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும் பால்வளத்துறை அமைச்சரும் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது..





