நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளம் ஓரத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கொலையா அல்லது ரயில் விபத்தா என ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிபாளையம் – திருச்செங்கோடு சாலையில் உள்ள தொட்டிபாளையம் அருகே தண்டவாளம் ஓரத்தில் ஆண் சடலம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
Buy Now ! Pay Daily !
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த நபரின் இடுப்பு, தலை மற்றும் கைப் பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அவர் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், சடலம் கிடந்த பகுதி முழுவதும் புல்வெளியாக இருப்பதாலும், உடலில் பலத்த வெட்டுக்காயங்கள் காணப்படுவதாலும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால், இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற இரு கோணங்களில் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்






