நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசுகள் குறைக்கப்பட்டு, ரூ.5.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 8 கோடி முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு, தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
முட்டை விலையை நிர்ணயிக்கும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, நாமக்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விலையைக் குறைக்க முடிவு செய்தது. இதன்படி, ரூ.6 ஆக இருந்த முட்டை கொள்முதல் விலை தற்போது ரூ.5.80 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
Buy Now ! Pay Daily !
கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளதால் ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொள்வதும், முட்டை நுகர்வு குறைந்திருப்பதும் விலை சரிவுக்கு முக்கியக் காரணங்களாகஉள்ளது. மேலும், முட்டை உற்பத்தி அதிகரிப்பு, சில்லறை விற்பனை சரிவு, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி குறைவு ஆகியவையும் விலை குறைவுக்குக் காரணமாக உள்ளதால் முட்டை விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






