← முகப்புநாமக்கல் →

இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழகம் மாறும்... அமைச்சர் நம்பிக்கை!

ராசிபுரம் அருகே உள்ள அழியா இலங்கை அம்மன் கோவிலில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சுவாமி தரிசனம் செய்தார்.

இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழகம் மாறும்... அமைச்சர் நம்பிக்கை!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கூனவேலம்பட்டி அழியா இலங்கை அம்மன் கோவிலில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில் திருப்பணிகள், கும்பாபிஷேகம் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவிலில் திருப்பணிகள் இன்னும் முழுமையடையாமல் இருப்பதாகவும், கோபுரங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் ஒத்துழைப்புடன் கோபுரங்களைச் சீரமைத்து, இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பதே தங்களது எண்ணம் என்றும் கூறினார். இதற்கான பணிகள் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மேலும், தமிழகத்தில் லஞ்சம், ஊழல் என்ற கலாச்சாரத்தை முதலமைச்சர் ஒழித்துள்ளதாகக் கூறிய அமைச்சர், இதைவிடப் பெரிய சாதனை இருக்க முடியாது என்றார். ஐந்தாண்டு கால ஆட்சியின் முடிவில் இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாக தமிழகம் நிச்சயம் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையே, ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனைப் பணிகளுக்காக பட்ஜெட்டில் கூடுதலாக ரூ.5 கோடி நிதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கான அரசாணை வெளியான பிறகு, இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !